Showing posts with label பகுத்தறிவு. Show all posts
Showing posts with label பகுத்தறிவு. Show all posts

Friday, February 8, 2013

தமிலே படி, நாசமா போ..


தமிழில் கலைச்சொற்கள் கண்டு பிடிக்க வேண்டும். புதிய கலைச்சொற்கள் கொண்டு தமிழை வளர்க்கலாம் வாரீர் என்று மக்களின் நேரத்தையும்,உழைப்பையும் உறிஞ்சி அவர்களை மேலும் படு குழியில் தள்ள தமிழ்த் தலைவர்கள் ஆவலாக உள்ளனர். அந்த வரிசையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சேர்ந்து விட்டார்.

வாழ்கையே போராட்டமாக இருக்கும் பல மக்களுக்கு, ஆங்கிலம் மூலமாக ஒரு நல்ல வாழ்வு அமைந்தால் அதை எடுத்துக்கொண்டு மேலே செல்வது தான் அவர்கள் செய்வதாக இருக்கும். செய்ய வேண்டியதும் அதுவே.

அதை விடுத்து அவர்களை தமிழில் படி, தமிழ் மூலம் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று பொய்யுரை சொல்லி, வார்த்தை விளையாட்டுக்களால் மயக்கி,அவர்கள் வாழ்க்கையை நாசம் செய்வது என்ன வகையில் சரி ?

எழுத்தாளர் சுஜாதா திவ்யப்ரபந்தம் முதலிய நூல்களில் இருந்து பல கலைச்சொற்களைத் தொகுத்து எழுதினார்.அவை யாவும் ஆழ்வார்கள் முதலானர்வர்களால் பாசுரங்களில் பயன்படுத்தப்பட்டன. அவற்றை விடுத்து இவர்கள் மீண்டும் புதியதாக சொற்கள் கண்டு பிடிக்க வேண்டும் என்று அலைவது எவ்வகையில் சரி ? ( சுஜாதா எந்த காரணத்துக்காக தமிழ் எழுத்தாளர்களாலும் அரசாங்கத்தாலும் கண்டு கொள்ளப்படவில்லை என்பது அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவு தேவை இல்லை ).

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள்
 யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்று பாரதி சொன்னார். கலைச்சொல் கண்டு பிடி என்று சொல்லித் தமிழனை சாகடிக்கவில்லை.

தாம் வயிறும் வங்கிக் கணக்கும் வளர்ப்பதற்காக மொழி வெறி வளர்த்து அதன் மூலம் அரசியல் செய்தார்கள் தமிழ் இனத் தலைவர்கள்.

கவிஞர் இளம்பிறை ,

"அம்மா அடுப்பைப் பற்றவை குளிராவது காய்வோம் " என்று அருமையாக எழுதினார்.

ஒரு வேளை உணவுக்கே அல்லாடும் தமிழனை பகுத்தறிவு பேசி, வாத்தைகளால் மயக்கி ஒரு கார்த்திகை சொக்கப்பானை போலே வேண்டும்போது கொளுத்தி விட்டுக் குளிர் காய்வதே இந்த தனித்தமிழ் ஆதரவு எழுத்தாளர்களின் வேலையாகப் போய் விட்டது.

அவர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது உள்ள அரசியல் தலைவர்களும் - ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்து விடுவார்கள்.

இது தமிழ் நாட்டின் சாபக்கேடு போலும்.

Saturday, January 26, 2013

ஏம்ப்பா மூணு விரல் காண்பிக்கறே ?


"இன்னாபா, மூணு விரல் காமிக்கறே ?", நண்பர் நக்கலாக விசாரித்தார்.

நான் பிராணாயாமம் செஞ்சதை அவர் இப்படி கேட்டார்.

மூணு விரல் விஷயம் பத்திப் பார்ப்போம்.

பெரியவங்கள்ளாம் 3 விரல் காண்பிச்சு பெரிய விஷயங்கள்லாம் சொல்லிருக்காங்க.

இந்த விரல் யோகாவுலே பயன் படுகிறது.

3 விரல் இப்பிடி வெச்சுப்பாங்க


ஆள் கட்டி விரல் வளைந்து நிமிர்ந்து நிற்கும் கட்டை விரல் தொட வேண்டும்.

நடு விரல், மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் விலகி இருக்க வேண்டும்.


இதுக்கு சின் முத்திரை என்று பெயர்.


இங்கு பெருவிரல் ( கட்டை விரல் ) இறைவனை(பரமாத்மா) க் குறிக்கிறது.

ஆள் காட்டி விரல் ஜீவாத்மாவைக் குறிக்கிறது.

நடுவிரல் ஆணவத்தையும், மோதிர விரல் கன்மத்தையும் , சுண்டு விரல் மாயையையும் குறிக்கிறது.

அதாவது :

பரமாத்மா மேல் நோக்கி நிமிர்ந்து நிற்கிறது. ஜீவாத்மா பரமாத்மாவை 
அடைய வேண்டுமானால், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் விட  வேண்டும் என்பது அர்த்தம்.

யோகிகள் எல்லாம் இப்படித்தான் உபதேசம் செய்வாங்க. 



இறைவன் குரு வடிவாக இருந்து உபதேசம் செய்யும்போது காண்பிச்ச முத்திரைனும் சொல்லுவாங்க ( தக்ஷிணாமூர்த்தி உருவில் சிவ பெருமான் சின் முத்திரை காண்பித்து மௌன உபதேசம் செய்தான் என்பது நம்பிக்கை).

ஆனா இதெல்லாம் பகுத்தறிவில்லாத இந்து மதத்துலே தானே.

பின்னே இவர் ஏன் சின் முத்திரை காண்பிகிறார் ?





Sunday, January 20, 2013

நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் ?

--------------------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாளாவே உலகத்துலே எல்லாருமே ரொம்ப நல்லவங்களா மாறிட்ட மாதிரி ஒரு எண்ணம் வருது.நமக்கு தெரிஞ்சவங்க இல்லை. முன் பின் தெரியாத அந்நியர்கள் கூட ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க.

இதுக்குக் காரணம் எனக்கு வர பல E-MAILs தான்.

பேர் ஊர் தெரியாத பல பேர் எனக்கு பணம் அனுப்ப ஆசைப்படறாங்க. விடாம என்னை துரத்தித் துரத்தி பேங்க் அக்கௌன்ட் நம்பர் கொடுனு அன்பு தொல்லை தாங்க முடியலே.

அதுலே முக்கியமான விஷயம் - அவுங்களுக்கு ஆப்பிரிக்காலே ஒரு பெரிய லாட்டிரி விழுந்துருக்கு. அவுங்களுக்கு பேங்க் அக்கௌன்ட் இல்லாததாலே என்னோட பேங்க் அக்கௌன்ட் லே பணம் போட முடிவு செஞ்சிருக்காங்க.அதுக்கு என்னோட அக்கௌன்ட் நம்பர் கேக்கறாங்க.

இது கலி காலம் தானா ? ஏதோ த்ரேதா யுகம் மாதிரி இருக்கு. மனுசங்க இவ்வளோ நல்லவங்களா மாறிட்டாங்களே !

அவ்வளவு பணத்தையும் எனக்கே எனக்கு அனுப்ப அவுங்க Just Fund Transfer Charges மட்டும் கேக்கறாங்க. அதுவும் என்ன ஒரு 250 டாலர் தான். இதை கட்டினா எனக்கு 2,500,000 டாலர் அனுப்பறாங்க. அடேயப்பா எவ்ளோ பணம்?

இது தெரியாம நம்ம 2G ராஜா ( தமிழில் இராசா ) தப்பு தப்பா தப்பு பண்ணிட்டு திரு திருன்னு முழிசிண்டிருக்கார். கூடவே கனிமொழி அம்மாவும் அதே மாதிரி முழிக்கறாங்க.

என்ன இருந்தாலும் பகுத்தறிவுக்கடவுள் எனக்கு அருள் பண்ணின மாதிரி அவங்களுக்கு பண்ணலே..

கொடுக்கற தெய்வம் கூரையை பிச்சிண்டு கொடுக்கும்னே சொல்லுவாங்களே, இதானா அது ? இப்போ EMAILஐ பிச்சிண்டு கொட்டறது.

இப்பிடி ஒரு ரகம் மக்கள் இருக்க இன்னொரு ரகம் இன்னுமே சூப்பர்.

ரேஷ்மி குப்தா, சுபத்ரா தேஷ்பாண்டே, மதுமிதா முதலியார் . அஞ்சலி தேஷ்முக், ஷர்மிளா ஐயர் , சுபாஸ்ரீ படேல், பிரியா சென்குப்தா, பல்லவி கபூர்,சோனம் தீட்சித், கன்வல்ஜித் கவுர், கிறிஸ்டினா, ஸ்மிதா அரோரா,ரூபாலி பானேர்ஜி .....

இவுங்கல்லாம் யாருன்னு கேக்கறீங்களா ?

எனக்கு EMAIL லே PROPOSE பண்ணினவங்க.அதுவும் எப்படி ?

Sample சில வரிகள் :

"Honey I am waiting for your reply "
"We had a good time. Time to meet up again ?"
"Mere Yaar, Long time.Shall we ..?"
"Missing you since last week. Shall we meet up in Carlton, NYC this week end?"

நீங்களே சொல்லுங்க.. நான் என்ன செய்யறது?

நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் ? 


Saturday, January 19, 2013

இன்னாபா அய்யர் தானே நீ ?

"நீ அய்யர் இல்லே ? என்னமோ ஐயங்கார்னு எழுதி இருக்கே ? பாப்பாரவுகதானே நீங்கள்ளாம் ? இப்போ ஏன் கொழப்புறே ?," - என் நண்பர் கேட்டார்.

அவருக்குத் தெரியாது குழப்புறதுதான் நம்ம வேலைன்னு...

ஐயங்கார்குள்ளே இருக்கற குழப்பங்கள் போதாதுன்னு இன்னும் அய்யர் ஐயங்கார் குழப்பமே தீர்ந்தபாடில்லை. 

ஐயங்கார் ஒரு வித்தியாசமான சாதி. அவுங்க வீட்டுலே தமிழ் சும்மா பூந்து விளையாடும்.ஆனா அவுங்களை அய்யர்னு சொல்லி நம்ம தமிழ் நாட்டுலே அவங்களையும் தமிழுக்கு விரோதின்னு சொல்லி வர்றாங்க நம்ம தமிழ் தலைவர்கள்.(  அய்யர் தமிழ் விரோதி இல்லைனு இன்னொரு தடவை பார்க்கலாம். மொத்தமா அப்போ திட்டு  வாங்கிக்கறேன் ).

இப்போ விஷயத்துக்கு வருவோம்.

ஐயங்கார் மக்கள் நாமம் போட்டுப்பாங்க ( மத்தவங்களுக்கு இல்லை ). இதுலே ஒரு வசதி. மத்தவங்க போடறதுக்கு முன்னாடி நாமளே போட்டுக்கறது நல்லது தானே ஒரு ANTI-VIRUS மாதிரி !

நாமம் - பெருமாளோட பெயர்களைச்சொல்லி போட்டுக்கறது. திருமண் அப்பிடின்னு சொல்றது உண்டு.ஸ்ரீ ரங்கம் காவேரிக்கரை அருகே கிடைக்கும் ஒரு வகையான களி மண் என்று கேள்வி. ( தலைக்குள்ளே தான் களி மண் இருக்கே வெளிலேயும் எதுக்குன்னு பகுத்தறிவு பேசலாம். நல்ல POINT ).

ஐயங்கார் விபூதி இட்டுக்க மாட்டாங்க. சிவன் கோவிலுக்குப் போக மாட்டாங்க.பல பேர் விநாயகர் சதுர்த்தி கூட கொண்டாட மாட்டாங்க.

விஷ்ணு கோவிலுக்கு போறாங்களோ இல்லையோ தினமும் வீட்டுலே சாத்துமுது பண்ணுவாங்க, விசேஷ நாட்கள்லே திருக்கண்ணமுது செய்வாங்க.

கறி ( காய் கறி ) - பொரியல் கிடையாது/- கறி அமுது தான்..

 சமையல் கிடையாது.,ஆனா தளிகை பண்ணுவாங்க.தளிகை பண்ற உள் - அதாங்க தமிழ்லே KITCHEN னு சொல்லுவோமே அது தான். இப்போவெல்லாம் தளிப்பண்றஉள் அப்டின்னா ஏதோ TALIBAN மாதிரி இருக்குனு சொல்லிட்டு KITCHEN என்று தமிழ் வார்த்தை பயன்பாடு அதிகமா இருக்கு.

தளிகையை பெருமாளுக்கு அம்சே பண்ணுவாங்க.

மேலே சில புரியாத வார்த்தைகள் இருக்கில்லையா ? அத்தனையும் தமிழ் வார்த்தைகள். உதாரணமா :

சாத்துமுது - சாறு + அமுது. ( தக்காளி, புளி இதோட சாறுலேருந்து செய்யறதாலே சாற்று அமுது - ஆண்டவனுக்கு   படைபதால் அமுது ஆகிறது.
அதுலேயும் படையல் கிடையாது. அம்சே பண்ணுறதுதான்.

அம்சே பண்றது - அமுது செய்யப் பண்ணுவது - இறைவனுக்கு உணவை அளிப்பது.

திருக்கண்ணமுது - திரு + கண்ணன் + அமுது. கண்ணபிரான் சாப்பிட்டதால் அது அமுது ஆனது.

கூட்டு - இது ஐயங்கார் அகத்துலே நெகிழ் கறி அமுது அப்பிடின்னு அழைப்பாங்க. இந்த ஒரு வார்த்தை இப்போ உபயோகத்தில் இல்லை.

ஆத்துக்குங்கற வார்த்தை ரொம்ப பிரபலம். தமிழ் லே அகம் - உள்ளே ( அக நானூறு, அகத்தின் அழகு .. ). அதுனாலே வீடு அகம் ஆனது.

அதே போலே அக்கார அடிசில், , புளியோதரை ,எள்ளோரை ( எள் சாதம்) - இப்படி பல.

வீட்டுக்கு வரும் பெரியவரை வரவேற்று  ஏள்ளப்பண்ணுவார்கள். எழுந்தருளப்பண்ண வேண்டும் என்பதை எள்ளப்பண்ணனும் என்று இப்போது சொல்கிறார்கள்.

நீங்கள் என்று  சொல்வது  மரியாதைக்  குறைவு அதனால் தேவள் ( தேவரீர்கள் ) என்று சொல்வார்கள்.

எப்பவும் நான் கிடையாது. அடியேன் தான். ( அடியேன் ராமானுஜ தாசன் ...).

வைஷ்ணவ ஆழ்வார்கள் 12 பேர். இவர்களில் பிராமணரல்லாத ஆழ்வார்கள் பலர்.பெண் ஆழ்வாரும் உண்டு ( ஆண்டாள் ). அத்தனை ஆழ்வாருக்கும்  கோவிலில் சந்நிதி உண்டு.ஒரு வகையில் ஒரு முற்போக்கான சமுதாயமாக இருந்திருக்கிறது. ராமானுஜர் தான் முதல் சீர்திருத்தவாதி என்பது மறைக்கப்படும் உண்மை ( வாழ்க பகுத்தறிவு ).

108 திவ்ய தேசம் ஐயங்கார்களுக்கு முக்கியம்.பெருமாள் கோவில்கள் 108 ஐ
ஆழ்வார்கள் பாடினார்கள். அவை திவ்ய தேசம் ஆயின.இமலயமலையில் பத்ரி மற்றும் நைமிசாரிண்யம்  முதல் ஆந்திர மாநிலத்தில் அஹோபிலம் தொட்டு தமிழ் நாட்டில் பல கோவில்கள் சேர்த்து , கேரளா மாநிலம் வரையில் ஆழ்வார்கள் பாடின திவ்ய தேசங்கள்.

இப்போது 109 ஆவது திவ்ய தேசம் - அமெரிக்கா.

 ஐயங்கார் குடும்பத்தில் ஒருவராவது அமெரிக்காவில் வேலை செய்கிறார். ஐயங்கார் என்பதால் மட்டும் அவர்களுக்கு வேலையும் படிப்பும் மறுக்கப்படாததால் அமெரிக்காவில் இவர்கள் பெருமளவில் குடியேறிவிட்டனர். அதோடு கோவில்களும் உற்சவங்களும்.

நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆழ்வார்கள் 4000 பாசுரங்கள்.அத்தனையும் தமிழ்.ஆழ்வார் பாசுரம் கொஞ்சமாவது தெரியாத ஐயங்கார் இருந்தால், வள்ளுவர் சொன்ன மாதிரி, "அவியினும் வாழினும் என் ?". தினப்படி பாசுரம் சொல்லாம ஐயங்கார் இருந்தால் பேசாம அவன் மதம் மாறிடலாம்.அவ்வளவு தமிழ் + பக்தி கலந்த பாட்டுக்கள்.  

ஆண்டாள் பாடின திருப்பாவை தெரியாத மனிதர்களை இந்த உலகம் சுமப்பதே தவறு என்று ஒரு தமிழ்ப் பாசுரம் :

"ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதுவும் வம்பு " 

ஒருக்கால் அதுனாலே தான் அடிக்கடி EARTHQUAKE வந்து பூமி பல பேரை காவு வாங்குதோ ? என்னோட "பகுத்தறிவு"க்குப் புரியலே !


பின் குறிப்பு :
பகுத்தறிவாளர்கள் "ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு ஐயங்கார்சாமிக்கு மூணு கொம்பு " என்று  ஸ்ரீ ரங்கம் ரங்கநாதருடைய தென்கலை திருமண் பற்றி  கண்டுபிடித்து நோபெல் பரிசு வாங்கினார்கள்.தென்கலை வடகலை பிரிவினை பற்றி பிறகு பேசுவோம்.

Friday, January 18, 2013

பிள்ளையார் சுழி

மொத மொதல்லே மூணாவுது  ப்ளாக் சைட் (blog site ) பண்ணறோம் ஒரு சுப ஆரம்பமா இருக்கட்டுமேன்னு தான் .. பிள்ளையார் சுழி போட்டு ஆர்ம்பிச்சி ருக்கேன்.

அது சரி அது என்ன பிள்ளையார்னு கேக்கறீங்களா ? பிள்ளையார் பிடிக்க குரங்கா முடிஞ்ச கதை மாதிரி ஆகாம இருக்கணுமே .. அதான்.

என்னதான் குரங்குதனமா எழுதினாலும் தொடங்கும்போதாவது நல்லா இருக்கணும் இல்லையா ? அது தானே பகுத்தறிவு ?

ஆனா ஒரு வடகலை ஐயங்கார் இப்படி பிள்ளையார்லேர்ந்து ஆரம்பிக்கலாமான்னு ஏதாவது கேட்டு வைக்காதீங்க அய்யா ! புண்ணியமா போகும். எதுடா சாக்குன்னு காதுக்கிட்டு இருக்காங்க நம்ம மக்கள்.சும்மா பாஞ்சுடுவாங்க.. இது ஒரு புது சண்டை போட்டுதான் பாக்கலாமேன்னு ..

இங்கிலீஷ் சைட் தான் யாரும் படிக்க மாட்டேன்கறாங்க தமிழ்லே எழுதினாலாவது படிக்கறாங்களான்னு பாக்கலாமே ! 

ஆனா ஒரு விஷயம் .... இந்த ப்ளாக் ( BLOG ) மூலமா நம்ப தமிழ் சமுதாயத்தை மாத்தப்போறேன், வானத்தை வில்லா வளைக்கப்போறேன், கச்சத்தீவை மீட்கப்போறேன், தனி ஈழம் வாங்கப்போறேன், காவேரி தண்ணி வாங்கப்போறேன் அப்படின்னு உட்டாலக்கடி வேலை எல்லாம் என்னாண்டே இல்லை.அதுக்கெல்லாம் தமிழ் நாட்டுலே நெறைய பேர் இருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க ..

வழக்கம் போலே பாப்பான் பாம்பு புண்ணாக்குன்னு E-MAIL எழுதாமே ஏதாவது உருப்படியா எழுதுங்கப்பா தம்பிங்களா .. புண்ணியமா போகும் ..