Sunday, February 24, 2013

சில கேள்விகள் ..

ஒரு சில கேள்விகள் நமக்கு எப்போதுமே உண்டு. பல நேரங்களில் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் தேறவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

அடியேனின் "ஏன் கேள்விகள் ... "

தமிழ் டி.வி. சேனல்களில் பேசும் பெண் அறிவிப்பாளர்கள்

கண்ணை உறுத்தும் ஆடை அணிகிறார்கள்
தமிழ் பேச சிரமப்படுகிறார்கள்
கையை ஆட்டுகிறார்கள், அதுவும் ஒரு பெண்டுலம் மாதிரி

தமிழ் எழுத்தாளர்கள்

எப்போதும் புரியாமலே எழுதுகிறார்கள்
இலங்கை பற்றியே எழுதுகிறார்கள்
ஒரு மாதிரி ஒப்பாரி வைப்பதில் போட்டி போடுகிறார்கள்
எப்போதும் ஹிந்து மதத்தை சாடுகிறார்கள்
சினிமா கலைஞர்களை போற்றியே பேசுகிறார்கள்
'பார்ப்பன ஏகாதிபத்தியம்' இல்லாமல் எழுதுவதே இல்லை

தமிழ் மொழி ஆர்வலர்கள் / தமிழ்த் தலைவர்கள் / சினிமா இயக்குனர்கள்

சினிமாவில் நாயகிகள் ஆடை குறைப்பது தமிழ் கலாச்சாரம் தானா ?
சினிமா விழாக்களில் நாயகிகள் அரை குறை ஆடைகளில் வருவது சரியா ?

பெரியாரும் அண்ணாவும் தவறே செய்யவில்லையா ? அவர்கள் மனிதர்களே இல்லையா ? அண்ணல் காந்தியே தவறுகள் பல செய்தார் என்று பார்க்கிறோமே...

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் பகுத்தறிவு சார்ந்து எழுதுவதாகக் கூறிக்கொண்டு 'என் சீதை சோரம் போவாள்', 'என் கண்ணகி மதுரையை எரிக்க மாட்டாள்', 'என் கஸ்துரி பாய் அடிமைப் பணி செய்ய மாட்டாள் ' என்று பிரச்சாரம் செய்கிறார்களே - அது என்ன தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் அடையாளமா ?

பெரியவர் அமிர்தலிங்கம், சாம் துரையப்பா,சிறி சபாரத்தினம், பத்மநாபா, லக்ஷ்மன் கதிர்காமர் இவர்கள் எல்லாம் தமிழர்கள் தானே? இவர்கள் கொலை எல்லாம் கொலை இல்லையா? செய்தவர்கள் கொலை காரர்கள் இல்லையா?

ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்கள் 23 பேர் தமிழர்கள் இல்லையா ?

தமிழ்ப் பத்திரிக்கைகளில் நடுப்பக்கத்தில் அரை நிர்வாண பெண்கள் படம் போடுகிறார்களே அது தமிழ்ப் பண்பாடா ?

"கள் உண்ணாமை" பற்றி வள்ளுவர் சொல்கிறாரே, தமிழ்த் தலைவர்கள் கள்ளுக்கடை ஒழிப்புப் போராட்டம் நடத்தாமல் அரசாங்கம் சார்பாகவே கள்ளுக்கடை நடத்துகிறார்களே அது வள்ளுவ துரோகம் இல்லையா ?

1 comment:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete