Friday, February 8, 2013

வீரம் நிறைந்த தமிழ் நாடு

தமிழர் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது. அதுவும் கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது.

முதலில் இலங்கையில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்த ஏழை இலங்கை மக்களை அடித்தார்கள். விஜயகாந்த் கட்சி வீரர்களும் இன்ன பிற வேலை இல்லாதவர்களும் சேர்ந்து மாதா கோவிலுக்கு வந்த பெண்களையும் சிறுவர்களையும் அடித்து ( செருப்பு , கல் மற்றும் துடைப்பம் ) துரத்தினார்கள். சோகம் என்னவென்றால், அந்த பயணிகளில் பலர் தமிழர்கள்.

இலங்கை வங்கி சென்னையில் உள்ளது. அதை அடித்து உடைத்தார்கள். வங்கி கட்டடம் உடைப்பால் இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிட்டது.

ராஜபக்ஷேவின் உறவினர் ராமநாதபுரம் கோவிலுக்கு வந்தபோது கோவிலுக்கு உள்ளேயே வைத்து மரியாதை செய்தார்கள் ( செருப்பால் ).


இப்போது ராஜபக்ஷே திருப்பதி வந்தார், எதிர்ப்பு மறுபடியும்.

அவர் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும். பெருமாள் சேவை அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. பெருமாள் பல சோதனைகளை வைத்து, பின்பு தான் அருள் வழங்குவார்.

இது போன்ற சோதனைகள் எம் தமிழ் மக்களிடமிருந்து வரும். அஞ்ச வேண்டாம் திரு.ராஜபக்ஷே.. ஏன் என்றால் அடிக்கிற கை தானே அணைக்கும் ?

என்ன இருந்தாலும் முறத்தால் புலியை விரட்டிய ஒரு இனம் அல்லவா ?

No comments:

Post a Comment