பால் தினகரன் சிங்கை வருகிறார்.
வேறே என்ன? சுவிசேஷம் தான். அவர் என்ன சொல்வரோ புரியாது, ஆனால் அழகாக சொல்வார். அவரை மாதிரி என்னால் பேச முடியாது. சிரிப்பு வராமல் பேச வேண்டும். தொடர்ந்து பேச வேண்டும். திடீர் என்று அழுகை வரமாதிரி பேச வேண்டும். மத்தவங்க அழுவாங்க. ஆனா அவர் அழ மாட்டார். அது ஒரு கலை தான். அதுவும் ஒரு மாதிரி தமிழ் பேச வேண்டும். அது கிறிஸ்தவ போதனை மொழி இலக்கணப்படி அமையும். அதற்ககும் தமிழ் இலக்கணத்துக்கும் தொடர்பு இல்லை.
உதாரணம் : ( கொஞ்சம் பயமாகவும் இருக்கும்- ஆவி, அக்னி - பயப்படாம ? )
"கர்த்தராகிய இயேசுவின் உயிரை உன்னுள் செலுத்து. உன் சமூகம் உனக்கு முன்னால் செல்லும்"
"அக்னி அபிஷேக ஆராதனைப் பெருவிழாவில் தூய ஆவியின் பெயரால் ..."
அதே போல் வைஷ்ணவத் தமிழ் ஒரு விதமாய் அமையும். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஒரு சிலரது வியாக்கியானங்கள் தமிழ் கலந்த மணிபிரவாள நடையில் இருக்கும்.
உதாரணம் :
"சேஷ சேஷி பாவத்தில் ஆநிரை மேய்த்த எம்பெருமான் சேஷனாகவும் ஜீவாத்மாக்கள் சேஷியாகவும் இருக்கும் படியாலே, புருஷாத்காரத் தினடிப்படையில் புருஷனாக எம்பெருமானும் ...."
இந்த நடையில் பல வேதாந்த கருத்துக்கள் விளக்கி இருப்பார்கள். பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் ஆழ்வார் பாசுர வியாக்கியானங்கள் ரொம்பவும் பிரசித்தம்.
நாஸ்திக வாதம் தலை தூக்கியபின் பல சம்பிரதாய தமிழ் வழக்குகளும் வார்த்தை முறைகளும் அழிந்துவிட்டன அல்லது அந்த தருவாயில் உள்ளன. இது "வேதம் வளர்த்த தமிழ்நாட்டின் " சாபக்கேடு போலும்.
No comments:
Post a Comment