Friday, February 8, 2013

பெண் விடுதலை அடைவது எப்படி ?

பெண் விடுதலை , பெண்ணீயம், பெண் கல்வி, பெண்ணைக் ஒரு பொருளாகப் பார்த்தல் - இதெல்லாம் இப்போ ரொம்ப பேர் பேசிக்கறாங்க. தொலைகாட்சிலேயும் இந்த பேச்செல்லாம் அடிக்கடி வருது.

அதுவும் இந்த திராவிட இயக்கப் பெண் பேச்சாளர்கள்,காங்கிரஸ் கட்சிப் பெண் பேச்சாளர்கள், இடது சாரிப் பெண் பேச்சாளர்கள் இவர்கள் எல்லாம் ஒரு NDTV , CNN-IBN  மாதிரி தொலைக் காட்சிகளில் வந்தால், ஒரே பெண்ணீயம், பெண் விடுதலை, ஆண் ஆதிக்க சமுதாயம், சனாதன பிற்போக்குக் கொள்கைகள் - இப்படி ஒரே முழக்கமா இருக்கும்.

சட்டுன்னு ஒரு வெட்டு.

விளம்பர இடைவெளி.

ஒரு ஆண் சவரம் செய்து கொள்வான். ஒரு சவர  நிறுவத்தின் BLADE தெரியும். காரியம் முடிஞ்ச உடனே, ஒரு நவ நாகரீக பெண் வந்து அவன் கன்னத்தைத் தடவுவாள்.

விளம்பரம் முடிவு.

பெண்ணீய வாக்குவாதம் தொடரும்.

மேலே சொன்ன திராவிட, மார்சிய, காங்கிரஸ் பெண்மணிகள் எல்லாரும் மறுபடியும் உரக்கப் பெண்ணீயம் பேசுவாங்க. ஒரே நேரத்துலே. பிறகு ஒரு நடுநிலையாளர் ( அந்த அம்மாவும் உரக்கப் பேசுவாங்க ).

சிறிய இடைவெளி.

விளம்பரம் ஆரம்பம்.

ஒரு ஆண் பெண்ணிடம் புன் முறுவல் பூப்பான். ( அசடு வழிவான் ). அந்த பெண் முகத்தை திருப்பிகொள்ளும். அந்த ஆண் ஒரு வாசனைத் திரவியம் அடித்துகொள்வான் (PERFUME )  .  பிறகு அந்த பெண் தானாக வந்து ஒட்டிகொள்வாள். இன்னும் நான்கு பெண்கள் பின்னே வருவார்கள்.

விளம்பரம் முடிவு.

பெண்ணீயம் தொடரும்.

முற்போக்குப் பெண்கள் பேச்சைத் தொடருவார்கள்.

விளம்பர இடைவெளி.

மகனின் கல்விக்கும், மகளின் கல்யாணத்துக்கும் சேமிக்க வேண்டி ஒரு அரசு நிறுவ வங்கி அறிவுரை விளம்பரம்.

விளம்பரம் முடிவு.

இப்போது வேறு சில பெண்களும் சேர்ந்துகொள்வர். இந்தக் கூட்டத்தில் ஒரு பாரதிய ஜனதா பெண் உறுப்பினரும் சேர்ந்து கொள்வார். மட்டற்ற எல்லா பெண்களும் ஒன்று சேர்ந்து இந்த பாரதிய ஜனதா பெண்ணைக் காய்வார்கள்
( ஹிந்து மதம் பிற்போக்கு மதம் இல்லையா ? அதனால்  .. )

விளம்பர இடைவெளி.

முகப்பரு களிம்பு வாங்குவாள் பெண். ஒரு வாரம் கழித்து எல்லா கல்லூரி ஆண்களும் இந்த பெண் பின்னால் ..

விளம்பாரம் முடிவு.

எல்லாப் பெண் பேச்சாளர்களும் ஒரே நேரத்தில் கத்த ( பார்லிமென்ட் போல்), நடுவர் அதற்க்கு மேல் கத்தி கலந்துரையாடலை முடித்து வைப்பார்.

பெண் விடுதலை கிடைத்து எல்லா பேச்சாளர்களும் அடுத்த  தொலைக்காட்சி ஸ்டூடியோவிற்கு  கார்களில் பத்திரமாகப் போய்ச் சேர்ந்து இதே சண்டையைத் தொடருவார்கள்.

சுபம்.

No comments:

Post a Comment