Saturday, January 19, 2013

இன்னாபா அய்யர் தானே நீ ?

"நீ அய்யர் இல்லே ? என்னமோ ஐயங்கார்னு எழுதி இருக்கே ? பாப்பாரவுகதானே நீங்கள்ளாம் ? இப்போ ஏன் கொழப்புறே ?," - என் நண்பர் கேட்டார்.

அவருக்குத் தெரியாது குழப்புறதுதான் நம்ம வேலைன்னு...

ஐயங்கார்குள்ளே இருக்கற குழப்பங்கள் போதாதுன்னு இன்னும் அய்யர் ஐயங்கார் குழப்பமே தீர்ந்தபாடில்லை. 

ஐயங்கார் ஒரு வித்தியாசமான சாதி. அவுங்க வீட்டுலே தமிழ் சும்மா பூந்து விளையாடும்.ஆனா அவுங்களை அய்யர்னு சொல்லி நம்ம தமிழ் நாட்டுலே அவங்களையும் தமிழுக்கு விரோதின்னு சொல்லி வர்றாங்க நம்ம தமிழ் தலைவர்கள்.(  அய்யர் தமிழ் விரோதி இல்லைனு இன்னொரு தடவை பார்க்கலாம். மொத்தமா அப்போ திட்டு  வாங்கிக்கறேன் ).

இப்போ விஷயத்துக்கு வருவோம்.

ஐயங்கார் மக்கள் நாமம் போட்டுப்பாங்க ( மத்தவங்களுக்கு இல்லை ). இதுலே ஒரு வசதி. மத்தவங்க போடறதுக்கு முன்னாடி நாமளே போட்டுக்கறது நல்லது தானே ஒரு ANTI-VIRUS மாதிரி !

நாமம் - பெருமாளோட பெயர்களைச்சொல்லி போட்டுக்கறது. திருமண் அப்பிடின்னு சொல்றது உண்டு.ஸ்ரீ ரங்கம் காவேரிக்கரை அருகே கிடைக்கும் ஒரு வகையான களி மண் என்று கேள்வி. ( தலைக்குள்ளே தான் களி மண் இருக்கே வெளிலேயும் எதுக்குன்னு பகுத்தறிவு பேசலாம். நல்ல POINT ).

ஐயங்கார் விபூதி இட்டுக்க மாட்டாங்க. சிவன் கோவிலுக்குப் போக மாட்டாங்க.பல பேர் விநாயகர் சதுர்த்தி கூட கொண்டாட மாட்டாங்க.

விஷ்ணு கோவிலுக்கு போறாங்களோ இல்லையோ தினமும் வீட்டுலே சாத்துமுது பண்ணுவாங்க, விசேஷ நாட்கள்லே திருக்கண்ணமுது செய்வாங்க.

கறி ( காய் கறி ) - பொரியல் கிடையாது/- கறி அமுது தான்..

 சமையல் கிடையாது.,ஆனா தளிகை பண்ணுவாங்க.தளிகை பண்ற உள் - அதாங்க தமிழ்லே KITCHEN னு சொல்லுவோமே அது தான். இப்போவெல்லாம் தளிப்பண்றஉள் அப்டின்னா ஏதோ TALIBAN மாதிரி இருக்குனு சொல்லிட்டு KITCHEN என்று தமிழ் வார்த்தை பயன்பாடு அதிகமா இருக்கு.

தளிகையை பெருமாளுக்கு அம்சே பண்ணுவாங்க.

மேலே சில புரியாத வார்த்தைகள் இருக்கில்லையா ? அத்தனையும் தமிழ் வார்த்தைகள். உதாரணமா :

சாத்துமுது - சாறு + அமுது. ( தக்காளி, புளி இதோட சாறுலேருந்து செய்யறதாலே சாற்று அமுது - ஆண்டவனுக்கு   படைபதால் அமுது ஆகிறது.
அதுலேயும் படையல் கிடையாது. அம்சே பண்ணுறதுதான்.

அம்சே பண்றது - அமுது செய்யப் பண்ணுவது - இறைவனுக்கு உணவை அளிப்பது.

திருக்கண்ணமுது - திரு + கண்ணன் + அமுது. கண்ணபிரான் சாப்பிட்டதால் அது அமுது ஆனது.

கூட்டு - இது ஐயங்கார் அகத்துலே நெகிழ் கறி அமுது அப்பிடின்னு அழைப்பாங்க. இந்த ஒரு வார்த்தை இப்போ உபயோகத்தில் இல்லை.

ஆத்துக்குங்கற வார்த்தை ரொம்ப பிரபலம். தமிழ் லே அகம் - உள்ளே ( அக நானூறு, அகத்தின் அழகு .. ). அதுனாலே வீடு அகம் ஆனது.

அதே போலே அக்கார அடிசில், , புளியோதரை ,எள்ளோரை ( எள் சாதம்) - இப்படி பல.

வீட்டுக்கு வரும் பெரியவரை வரவேற்று  ஏள்ளப்பண்ணுவார்கள். எழுந்தருளப்பண்ண வேண்டும் என்பதை எள்ளப்பண்ணனும் என்று இப்போது சொல்கிறார்கள்.

நீங்கள் என்று  சொல்வது  மரியாதைக்  குறைவு அதனால் தேவள் ( தேவரீர்கள் ) என்று சொல்வார்கள்.

எப்பவும் நான் கிடையாது. அடியேன் தான். ( அடியேன் ராமானுஜ தாசன் ...).

வைஷ்ணவ ஆழ்வார்கள் 12 பேர். இவர்களில் பிராமணரல்லாத ஆழ்வார்கள் பலர்.பெண் ஆழ்வாரும் உண்டு ( ஆண்டாள் ). அத்தனை ஆழ்வாருக்கும்  கோவிலில் சந்நிதி உண்டு.ஒரு வகையில் ஒரு முற்போக்கான சமுதாயமாக இருந்திருக்கிறது. ராமானுஜர் தான் முதல் சீர்திருத்தவாதி என்பது மறைக்கப்படும் உண்மை ( வாழ்க பகுத்தறிவு ).

108 திவ்ய தேசம் ஐயங்கார்களுக்கு முக்கியம்.பெருமாள் கோவில்கள் 108 ஐ
ஆழ்வார்கள் பாடினார்கள். அவை திவ்ய தேசம் ஆயின.இமலயமலையில் பத்ரி மற்றும் நைமிசாரிண்யம்  முதல் ஆந்திர மாநிலத்தில் அஹோபிலம் தொட்டு தமிழ் நாட்டில் பல கோவில்கள் சேர்த்து , கேரளா மாநிலம் வரையில் ஆழ்வார்கள் பாடின திவ்ய தேசங்கள்.

இப்போது 109 ஆவது திவ்ய தேசம் - அமெரிக்கா.

 ஐயங்கார் குடும்பத்தில் ஒருவராவது அமெரிக்காவில் வேலை செய்கிறார். ஐயங்கார் என்பதால் மட்டும் அவர்களுக்கு வேலையும் படிப்பும் மறுக்கப்படாததால் அமெரிக்காவில் இவர்கள் பெருமளவில் குடியேறிவிட்டனர். அதோடு கோவில்களும் உற்சவங்களும்.

நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆழ்வார்கள் 4000 பாசுரங்கள்.அத்தனையும் தமிழ்.ஆழ்வார் பாசுரம் கொஞ்சமாவது தெரியாத ஐயங்கார் இருந்தால், வள்ளுவர் சொன்ன மாதிரி, "அவியினும் வாழினும் என் ?". தினப்படி பாசுரம் சொல்லாம ஐயங்கார் இருந்தால் பேசாம அவன் மதம் மாறிடலாம்.அவ்வளவு தமிழ் + பக்தி கலந்த பாட்டுக்கள்.  

ஆண்டாள் பாடின திருப்பாவை தெரியாத மனிதர்களை இந்த உலகம் சுமப்பதே தவறு என்று ஒரு தமிழ்ப் பாசுரம் :

"ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதுவும் வம்பு " 

ஒருக்கால் அதுனாலே தான் அடிக்கடி EARTHQUAKE வந்து பூமி பல பேரை காவு வாங்குதோ ? என்னோட "பகுத்தறிவு"க்குப் புரியலே !


பின் குறிப்பு :
பகுத்தறிவாளர்கள் "ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு ஐயங்கார்சாமிக்கு மூணு கொம்பு " என்று  ஸ்ரீ ரங்கம் ரங்கநாதருடைய தென்கலை திருமண் பற்றி  கண்டுபிடித்து நோபெல் பரிசு வாங்கினார்கள்.தென்கலை வடகலை பிரிவினை பற்றி பிறகு பேசுவோம்.

5 comments:

 1. Well written. "aduppangarai"- சமையலறை -(Kitchen)'s equivalent name. Today i see a new word here. We all call Tamil Thathha - Swaminatha Iyer without whom Tamil would have been deprived off many literatures. Tamil and Tamils have long standing obligation to "Iyer" for this. We always have good and bad characters in every section of the society.

  But today i learnt that Iyengars speak such a good Tamil at home.. My understanding was that sanskrit dominant language is what being spoken. May be my mistake.

  You never seem to take your eye away from "பகுத்தறிவாளர்கள்" in any of the topic. either you starting loving them or you like to use that word very often :-)

  -அருள்

  ReplyDelete
 2. What you resist persists...Amaruvi resist/hate too much about the so called rationalists and so, he uses them in his words more than anybody else in this world :) This is like Kamal doesn't believe in God and he always freaks out that he is an atheist everywhere he goes and indirectly makes a person thinks about God :)

  ReplyDelete
 3. ஐயர்(Iyer)/அய்யர்(Ayyer) ஐயங்கார்(Iyengar)/அய்யங்கார்(Ayyengar) ... is it good to use them alternatively?

  ReplyDelete
 4. Smkrishna, too much Ravishankar influence ?? But you are right. I have this onerous "duty" to bring out the fallacies of "Paguththarivu" and "rationalism". For far too long, have the "rationalists" wreaked havoc in TN . Three generations have been indoctrinated with "false" and anti-national propaganda that has resulted in 100s of places of historical and spiritual importance remain dilapidated. One such was Therazhundhur.it has been refurbished now thanks to the efforts of serious devotees and their sacrifices. But what about the other temples and other institutions ?
  For this the truth behind these rationalists needs to be brought out. And that is a task every one of us should take it upon ourselves.

  ReplyDelete
 5. @Amaruvi .. "Pagutharivu" or "Rational Thinking" are good to have in this millennium.I am not saying that in the sense EVK,Anna, KK, MGR/JJ or Veeramani meant. Those folks used the word "Pagutharivu" for their own good (& for the party).

  If you look at them, they are against "Hinduism" and they never speak against Islam, Christianity, Buddhism or any other religion/God for that matter. They came up with "Dravida Kazhagam" with certain "Kolgaigal". And they called it as "Pagutharivu". And pagutharivu is not the property/Copy-right of these folks or parties. The very context which triggered these movement does not exist now. In fact we see more temples and "aanmeega" inclination in TN now than any other part of India. That shows people started using "Pagutharivu"

  In my opinion, Without Pagutharivu, we cannot even understand Advaitam/Dvaitam or any other philosophical concepts. SO obviously, same Pagutharivu is going to Kill these very parties/individuals who survived in the name of pagutharivu and looting country!!!

  Mullai Mullal than eduka venum..

  My two cents (purely my personal view.. not intend to harm/hurt anyone here)

  ReplyDelete