Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

Sunday, February 24, 2013

சில கேள்விகள் ..

ஒரு சில கேள்விகள் நமக்கு எப்போதுமே உண்டு. பல நேரங்களில் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் தேறவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

அடியேனின் "ஏன் கேள்விகள் ... "

தமிழ் டி.வி. சேனல்களில் பேசும் பெண் அறிவிப்பாளர்கள்

கண்ணை உறுத்தும் ஆடை அணிகிறார்கள்
தமிழ் பேச சிரமப்படுகிறார்கள்
கையை ஆட்டுகிறார்கள், அதுவும் ஒரு பெண்டுலம் மாதிரி

தமிழ் எழுத்தாளர்கள்

எப்போதும் புரியாமலே எழுதுகிறார்கள்
இலங்கை பற்றியே எழுதுகிறார்கள்
ஒரு மாதிரி ஒப்பாரி வைப்பதில் போட்டி போடுகிறார்கள்
எப்போதும் ஹிந்து மதத்தை சாடுகிறார்கள்
சினிமா கலைஞர்களை போற்றியே பேசுகிறார்கள்
'பார்ப்பன ஏகாதிபத்தியம்' இல்லாமல் எழுதுவதே இல்லை

தமிழ் மொழி ஆர்வலர்கள் / தமிழ்த் தலைவர்கள் / சினிமா இயக்குனர்கள்

சினிமாவில் நாயகிகள் ஆடை குறைப்பது தமிழ் கலாச்சாரம் தானா ?
சினிமா விழாக்களில் நாயகிகள் அரை குறை ஆடைகளில் வருவது சரியா ?

பெரியாரும் அண்ணாவும் தவறே செய்யவில்லையா ? அவர்கள் மனிதர்களே இல்லையா ? அண்ணல் காந்தியே தவறுகள் பல செய்தார் என்று பார்க்கிறோமே...

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் பகுத்தறிவு சார்ந்து எழுதுவதாகக் கூறிக்கொண்டு 'என் சீதை சோரம் போவாள்', 'என் கண்ணகி மதுரையை எரிக்க மாட்டாள்', 'என் கஸ்துரி பாய் அடிமைப் பணி செய்ய மாட்டாள் ' என்று பிரச்சாரம் செய்கிறார்களே - அது என்ன தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் அடையாளமா ?

பெரியவர் அமிர்தலிங்கம், சாம் துரையப்பா,சிறி சபாரத்தினம், பத்மநாபா, லக்ஷ்மன் கதிர்காமர் இவர்கள் எல்லாம் தமிழர்கள் தானே? இவர்கள் கொலை எல்லாம் கொலை இல்லையா? செய்தவர்கள் கொலை காரர்கள் இல்லையா?

ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்கள் 23 பேர் தமிழர்கள் இல்லையா ?

தமிழ்ப் பத்திரிக்கைகளில் நடுப்பக்கத்தில் அரை நிர்வாண பெண்கள் படம் போடுகிறார்களே அது தமிழ்ப் பண்பாடா ?

"கள் உண்ணாமை" பற்றி வள்ளுவர் சொல்கிறாரே, தமிழ்த் தலைவர்கள் கள்ளுக்கடை ஒழிப்புப் போராட்டம் நடத்தாமல் அரசாங்கம் சார்பாகவே கள்ளுக்கடை நடத்துகிறார்களே அது வள்ளுவ துரோகம் இல்லையா ?

Tuesday, February 5, 2013

இது மட்டும் எப்படி சார் ?

கொஞ்ச நாளாவே ஒரு சில கேள்விகள் உண்டு. யார் கிட்டே கேக்கறதுன்னு தெரியலே.நானே கேட்டுக்கறேன்.

1. சினிமாலே தமிழ் வாத்தியார் எல்லாரும் அரை கிறுக்காவே வராங்களே ?
2. வில்லனுக்கு ஐடியா குடுக்கும் வக்கீல் ஒரு ஐயர் ?
3. தமிழ் வாத்தியார் காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பார் / முயற்சி செய்வார்
4. தமிழ் வாத்தியார் காதல் இலக்கியமே நடத்துவார்
5. பட்டிகாட்டு கிராமத்துலே ஹீரோயின் மட்டும் ஸ்கிர்ட் , டி-ஷர்ட் லே வருவா
6. ஹீரோயின் ஓடி வந்தே ஆகணும், அதுவும் slow motion
7. ஓடி வர்றது 3 நிமிஷமா நீண்டுகிட்டே இருக்கும்- ஊரே வேடிக்கை பார்க்கும்
8. வில்லன் நடிகர் ஏன் சவரம் செய்து கொள்வதில்லை ?
9. வீட்டுக்குள் குளிக்கும் போது கதவு மூடுவார்கள். அருவியில் அப்படி இல்லை .
10. தேவர் சமூக ஆட்கள் அநியாயத்தை எதிர்ப்பர்கள். நல்லவர்களாக இருப்பார்கள்.
11. திடீர் என்று வரும் ஒரு அழகி 20 ஆண்கள் புடை சூழ ஆடிவிட்டு மாயமாய் மறைந்து போவாள். அவள்
எங்கே போகிறாள் ?
12. சாப்ட்வேர் எழுதும் ஹீரோக்களின் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர்
ஓடிக்கொண்டிருக்கும். வேலை செய்யறானாம் ....
13. அமைச்சர் எப்பவுமே கருப்பாக இருப்பார் - முகத்தில் வடுக்களுடன் ..
14. ஹீரோவின் நண்பன் பேசிக்கொண்டே இருப்பான். அது தான் காமெடி ..
15. கோவில்கள் காதல் செய்யும் இடங்கள். குருக்கள் எப்பவும் ஒரு ஏமாளி.
16. முஸ்லிம்கள் எப்பவும் ஏழைகளாக இருப்பார்கள் - குல்லாயுடன் ..
18. பள்ளிக்கூடம் - 2 கோஷ்டி மாணவர்கள் சண்டை போடும் இடம்
19. லைப்ரரி - காதலன் காதலியை தேடும் இடம்
20. போலீஸ் ஸ்டேஷன் - போலீஸ்காரர் ரவுடி போல் நடக்கும் இடம்
21. போலீஸ் இன்ஸ்பெக்டர் - காமாந்தக ஆள்
22. ஒரே ஒரு நல்லவர் - ரிடையர் ஆகும் வயதில் உள்ள போலீஸ் ஏட்டு
23. கணவனை இழந்தவள் - ஹீரோயினின் தாய்
24. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவள் - ஹீரோவின் தங்கை
25. எப்போதுமே புரியாதது, கடைசி வரையும், வீட்டுக்கு வந்த பின்பும் தேடிக்கொண்டு இருப்பது - கதை